தடுப்பூசிக்காக 15 மில்லியன் வழங்கும்! பிரதமர் மோடி அறிவிப்பு!

05 June 2020 அரசியல்
modidonation.jpg

கொரோனா வைரஸிற்கு எதிராக உருவாக்கப்படும் தடுப்பூசி கூட்டணிக்கு இந்தியா சார்பில் 15 மில்லியன் வழங்கப்படும் என, பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக இருக்கும் போரீஸ் ஜான்சான், தற்பொழுது உலகளில் உள்ள பெரிய தலைவர்களை இணைத்து புதிய மருத்துவ மாநாட்டினை நடத்தினார். இதில், உலகின் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த சூழ்நிலையில், இதில் நம் நாட்டின் சார்பில், பாரதப் பிரதமர் மோடிப் பங்கேற்றார்.

அவர் அந்த மாநாட்டில் பேசுகையில், கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு இந்தியா எப்பொழுதும் துணை நிற்கும். GAVI எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பானது, உலகில் உள்ள நாடுகளின் ஒற்றுமைக்கு அடையாளம் என்றுக் கூறியுள்ளார். இந்த அமைப்பானது, கொரோனா வைரஸிற்கான மருந்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸிற்கு எதிராக மருந்து தயாரிக்க, இந்தியாவின் சார்பில் சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கும் எனவும் அவர் கூறினார். இதனை அடுத்த ஐந்து ஆண்டுகளில் வழங்க உள்ளதாகவும், தெரிவித்தார். இந்தியாவில் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு, இந்திர தனுஷ் என்றப் பெயரில் தடுப்பூசிப் போடும் திட்டமானது அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS