மாலத்தீவில் 500 மில்லியன் டாலரில் உள்கட்டமைப்பு! இந்தியா உருவாக்குகின்றது!

14 August 2020 அரசியல்
jaishankarmp1.jpg

மாலத்தீவில், தற்பொழுது இந்திய அரசு 500 மில்லியன் டாலர் மதிப்புடைய, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தர முடிவு செய்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத், நேற்று மாலத்தீவுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகீத்திடம் வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், பலவித உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தருவதற்கான ஒப்பந்தமானது கையெழுத்தாகி உள்ளது.

இதில், சுற்றுலா, வேலை வாய்ப்பு, அவசர மருத்துவத்திற்கான வசதிகள் அடங்கும். மொத்தமாக, மாலத்தீவு மற்றும் மாலத்தீவுடன் தொடர்பில் உள்ள நான்கு தீவுகளுக்கும் இந்த வசதியானது செய்து தரப்பட உள்ளது. இந்த வசதிகளில் 6.7 கிலோமீட்டர் நீளமுள்ள பாலமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS