அமெரிக்காவினைப் பற்றி நாம் கூற வேண்டியதில்லை. அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆயுதங்கள் மற்றும் கருவிகள் என, உலகிலேயே மிகப் பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது. அந்த நாட்டின் வளர்ச்சிப் பற்றி, நம் அனைவருக்குமே தெரியும்.
அவர்களிடம் உள்ள போர்க்கருவிகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவைகளை வாங்குவதற்கு உலகளவில் கடும் போட்டியே நிலவுகின்றது எனலாம். இருப்பினும், அமெரிக்கா தன்னுடைய நட்பு நாடுகளுக்கு மட்டும் வழங்கி வருகின்றது.
இந்தியா தற்பொழுது அமெரிக்காவிடம் இருந்து, சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு, ஆயுதங்களை வாங்க முடிவு செய்துள்ளது. கடற்படைக்காக இந்த ஆயுதங்களை வாங்க இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்கே45 என்ற மாடல் துப்பாக்கிகளை வாங்க உள்ளது இந்தியக் கடற்படை. இதற்காக, ஒரு பில்லியன் டாலரினையும் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், சுமார் 13 எம்கே45 துப்பாக்கிகளை வாங்க இயலும்.