அமெரிக்கா இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வரும் ஆயுதங்கள்!

01 July 2020 அரசியல்
indiaattackpok.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் பகுதியில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக இந்தியா தற்பொழுது ஆயுதக் குவிப்பில் இறங்கி உள்ளது.

கடந்த ஜூன் 15ம் தேதி அன்று, இந்திய வீரர்களை சீன இராணுவம் அத்துமீறித் தாக்கியது. இதில், 20 வீரர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இதனால், இரு நாட்டு இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், லடாக் பகுதியில் சீன இராணுவம் அத்துமீறி, தன்னுடையப் படைகளை குவித்துக் கொண்டே உள்ளது.

மேலும், 423 மீட்டருக்கு முன்னேறி வந்துள்ளது. இது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்தியாவும் தன்னுடைய இராணுவத் துருப்புக்களை அதிகரித்து உள்ளது. இந்தியாவின் இராணுவ வீரர்கள் மட்டுமின்றி, போர் விமானங்களும் லடாக் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன், வலிமையான ஏவுகணைகளும் அங்கு நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த சூழ்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளையும், பிரான்சிடம் இருந்து அவசரமாக, ரபேல் விமானங்களையும் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

அதற்கு இரு நாடுகளும், ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறியுள்ளன. இந்த சூழ்நிலையில், இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான இஸ்ரேலிடம் இருந்து வான்வெளிப் பாதுகாப்பு ஆயுதங்களை, அவசர காலத்திற்காக வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது குறித்து, இஸ்ரேலிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. அதனை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாகவும், இந்தியாவிற்கு விரைவில் இஸ்ரேல் பெயர் குறிப்பிடப்படாத புதிய வகை தற்காப்பு மற்றும் தாக்குதல் தொழில்நுட்பத்தினை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே போல், இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் அமெரிக்காவும், அவசரக் காலத்தின் பொழுது, தன்னுடைய செயற்கைக்கோள்கள் உதவியினையும், லடாக் பகுதி மற்றும் பதற்றத்திற்குரியப் பகுதிகளின் தகவல்களையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதே போல், மிகவும் சக்தி வாய்ந்த ஆர்ட்டிலரி ஆயுதங்களையும் வழங்க உள்ளது. எம்777எஸ் எனப்படும் மலைகளில் பயன்படுத்தப்படும் ஆர்ட்டிலரி ஆயுதங்களையும், வழங்க முன்வந்துள்ளது. இத்தகைய ஆயுதங்கள் 40 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள படைகளைத் தாக்க வல்லவை ஆகும்.

HOT NEWS