ரஷ்ய இராணுவ பயிற்சியில் இருந்து இந்தியா அதிரடி விலகல்!

31 August 2020 அரசியல்
indiansoldiers.jpg

ரஷ்யாவில் இந்தாண்டு நடைபெறுகின்ற இராணுவ பயிற்சியில் இருந்து, இந்திய இராணுவம் அதிரடியாக விலகியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ரஷ்யாவில் 20 நாடுகள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான இராணுவ பயிற்சி மற்றும் ஒத்திகையானது நடைபெறும். இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம், இந்தப் பயிற்சியானது நடைபெற உள்ளது. இது செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி, 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், ஒவ்வொரு முறையிம் இந்திய இராணுவம் பங்கேற்பது வாடிக்கையான விஷயம் ஆகும்.

ஆனால், இந்த முறை நடைபெறுகின்ற பயிற்சியில் இந்திய கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து உலகம் முழுக்கப் பரவி வருகின்ற கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக, இந்திய இராணுவம் கலந்து கொள்ளாது என, மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

HOT NEWS