விமானி காணாமல் போய் 11 நாட்களுக்குப் பிறகு, அவரின் உடலினை கண்டுபிடித்து உள்ளதாக, இந்திய விமானப்படை தெரிவித்து உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி அன்று, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-29 கே விமானமானது பயிற்சியில் ஈடுபட்டது. அந்தப் பயிற்சியின் பொழுது, எதிர்பாராத விதமாக அரபிக் கடலில் விழுந்தது. அதில் இருந்து, ஒரு விமானி பத்திரமாக மீட்கப்பட்டார். ஆனால், அதில் இருந்த மற்றொரு விமானியான நிஷாந்த் சிங் காணாமல் போனார்.
அவருடைய உடலினைத் தேடும் பணியில், இந்தியக் கடற்படையும், விமானப்படையும் ஈடுபட்டன. இந்த சூழலில், கோவாவின் கடற்பகுதியில் இறந்த விமானியின் உடற்பாகங்கள் சில கிடந்ததை அடுத்து, அவருடைய உடலினை கோவாக் கடற்பகுதியில் தேடினர். அப்படித் தேடும் பொழுது, கோவாவின் கடற்கரையில் இருந்து சுமார் 30 மைல் தொலைவில் தேடுதல் பணி தொடர்ந்தது. அங்கு சுமார் 70மீட்டர் ஆழத்தில் நிஷாந்தின் உடலானது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மீட்டதும், தற்பொழுது அரசு மரியாதையுடன் நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.