39,000 கோடி ரூபாய் மதிப்பில், 83 போர் விமானங்கள்! இந்திய விமானப்படை வாங்க உள்ளது!

18 February 2020 அரசியல்
mig27.jpg

இந்தியாவின் விமானப் படையானது, தற்பொழுது புதிதாக 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான, ஒப்பந்தமானது இந்துஸ்தான் ஏவியானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் தற்பொழுது நடைபெற்றுள்ளது.

முதலில், 56,500 கோடியானது தேவைப்படும் என, ஹெச்.ஏ.எல் நிறுவனம் கூறியது. ஆனால், விமானப் படையானது, விலையைக் குறைக்க வேண்டும் எனக் கூறியது. அதயடுத்து, கடுமையான சோதனைக்குப் பின், தற்பொழுது 39,000 கோடி ரூபாய்க்கு இந்த திட்டத்தினை செய்து தர ஹெச்.ஏ.எல் நிறுவனம் முன் வந்துள்ளது.

இதற்கான, அறிவிப்பும் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தேஜஸ் மார்க்-1ஏ ரக போர் விமானங்களை, ஹெச்.ஏ.எல் நிறுவனம் வழங்கும். மொத்தமாக, 65,000 கோடி ஒப்பந்தத்தில், 39,000 கோடி ரூபாயானது, இந்த தேஜஸ் மார்க்-1ஏ விமானத்திற்கும் மீதமுள்ளவை, பிற விமானங்களுக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக, 123 போர் விமானங்களை வருகின்ற 2022ம் ஆண்டு வழங்க ஹெச்.ஏ.எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கான, பராமரிப்பு மற்றும் அப்டேட் உள்ளிட்டவைகளுக்கும் சேர்த்தே, இந்த தொகையானது பெறப்படுகின்றது எனவும், கூறப்படுகின்றது. தேஜஸ் மார்க்-1ஏ விமானத்தில், மொத்தமாக 43 புதிய அப்டேட்டுகள் செய்யப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

HOT NEWS