இந்தியாவிற்கு எதிரான எந்த சவாலையும் ஏற்கத் தயார் என, இந்திய இராணுவத் தளபதி நர்வானேத் தெரிவித்து உள்ளார்.
நேற்று, லடாக் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் பகுதியில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். சீனாத் தொடர்ந்து தன்னுடைய அத்துமீறல்களைச் செய்து வருகின்றது. இது குறித்து உயரதிகாரிகளுடன் ஆய்வு செய்தார் நர்வானே. இது குறித்து அவர் பேசுகையில், சீனா தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது.
லடாக் எல்லைப் பகுதியில் கவலைக்கிடமான நிலையே நிலவுகின்றது. நம்முடைய வீரர்கள் நன்குப் பயிற்சிப் பெற்றவர்கள். நம்முடைய வீரர்கள் மன உறுதியுடன் உள்ளனர். அவர்கள் எந்த சூழ்நிலையினையும் சந்திக்கத் தயாராக உள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதிகளில், நம்முடைய வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். நம்முடைய வீரர்கள் உலகளவில் சிறந்தவர்கள். இந்த சூழ்நிலையில், நாம் தூதரக ரீதியாகவும், இராணுவ ரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றோம்.
இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு விரைவில் சரியாகும் என நம்புகின்றேன். நம்முடைய நலத்தினை நம்மால் பாதுகாக்க இயலும். தற்பொழுது எல்லையில் இருந்து எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்றுக் கூறியுள்ளார்.