இராணுவத்தில் இளைஞர்களுக்கு மூன்று ஆண்டு வாய்ப்பு! டூர் ஆப் டூட்டி!

15 May 2020 அரசியல்
indianarmytod.jpg

இந்திய இராணுவத்தில் விரைவில், இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்திய இளைஞர்கள் நீண்ட காலத்திற்கு இராணுவத்தில் பணிபுரிய விரும்புவத்தில்லை. சில காலம் பணிபுரிந்த பின், பின்னர் மீண்டும் தன்னுடைய சொந்த ஊர்களுக்குத் திரும்புவதையே விரும்புகின்றனர். இதனை முன்னிட்டு, டூர் ஆப் டூயூட்டி என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதன் மூலம், இந்திய இளைஞர்கள் மூன்று ஆண்டுகளுக்கு இந்திய இராணுவத்தில் பணிபுரிய வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இந்தத் திட்டத்தால், இந்திய இராணுவத்தின் செலவுகள் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. செலவுகளைக் குறைத்தது போலவும் இருக்கும். அதே போல், இராணுவத்தின் பலமும் அதிகரிக்கும்.

இதற்காக இந்திய வீரர்களுக்கான தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், இந்த திட்டத்தினை இந்திய இராணுவம் அமலுக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதற்கட்டமாக, இந்தத் திட்டத்தில் 1000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதே போல், சிஆர்பிஎப் படையில் உள்ளவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு இராணுவத்திற்கு அனுப்பப்பட்டு, பின்னர் பணி முடிந்ததும் மீண்டும் அவர்களுடைய சிஆர்பிஎப் பணிக்கே அனுப்பப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

HOT NEWS