பேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை நீக்குங்கள்! வீரர்களுக்கு இந்திய இராணுவம் உத்தரவு!

09 July 2020 அரசியல்
army89apps.jpg

அண்மையில், பயனர்களின் பாதுகாப்பு கருதி, சீனாவின் 59 ஸ்மார்ட்போன் ஆப்களை, இந்திய அரசு தடை விதித்தது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது 89 ஸ்மார்ட்போன் ஆப்களை பயன்படுத்த வேண்டாம் என, இந்திய வீரர்களுக்கு இந்திய இராணுவம் தகவல் அனுப்பி உள்ளது.

இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் தகவல்கள் சேகரிப்பு உள்ளிட்டவைகளைக் கருத்தில் கொண்டு, நேற்று இந்திய இராணுவம் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், கேம் ஸ்கேன்னர், 360 செக்யூரிட்டி, மொபைல் லிஜெண்ட்ஸ், டிண்டெர் உட்பட மொத்தம் 89 ஆப்களைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

HOT NEWS