சீனா இராணுவம் தற்பொழுது 50000 இராணுவ வீரர்களை, லடாக் பகுதியில் குவித்துள்ள நிலையில், இந்திய இராணுவம் தன்னுடையத் தளபதிகளுக்கு புதியக் கட்டளையினை விடுத்து உள்ளது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த ஜூன் 15ம் தேதி முதல், லடாக் பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகின்றது. இந்தியாவின் இராணுவ வீரர்களை, சீனா இராணுவம் அடித்துக் கொன்றதால், 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சூழ்நிலையில், இராணுவத்தின் பலக்கட்டப் பேச்சுவார்த்தையானது நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும், எவ்வித உடன்பாடும் இரு நாடுகளுக்கு இடையிலும் ஏற்படவில்லை.
இந்த சூழ்நிலையில், சீன இராணுவம், தன்னுடைய 50,000 இராணுவ வீரர்களை லடாக் பகுதியில் குவித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிநவீன பீரங்கிகள், போர் விமானங்கள், இராணுவத் தளவாடங்கள் என மூன்றுப் பெரும் இராணுவப் பிரிவுகளை சீனா குவித்து உள்ளது. இதனால், இந்தியா இராணுவமும் லடாக் பகுதியில் தன்னுடையப் படைப் பிரிவுகளை குவித்து உள்ளது. இந்திய இராணுவமானது, தன்னுடைய படைத் தளபதிகளுக்கு புதியக் கட்டளையினை விதித்துள்ளது.
அதன்படி, இந்தியாவின் இறையாண்மையினை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது எனவும், இதற்காக எவ்வளவுப் பெரிய விலையினைக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. தேவையில்லாமல், அதிக வலிமையினைப் பயன்படுத்தக் கூடாது எனவும், வீரர்களை தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாது எனவும் கூறியுள்ளது.
தொடர்ந்து எவ்வித வேலையினை செய்தாலும், இராணுவக் கட்டுப்பாட்டினை கடைபிடிக்க வேண்டும் எனவும், கூடுதல் பலத்தினை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.