ரஷ்யாவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பு! இந்தியா பங்கேற்றது!

24 June 2020 அரசியல்
indianparade.jpg

ரஷ்யாவில் நடைபெற்ற 2ம் உலகப் போர் நினைவு தினமான இன்று, வெற்றியினைக் கொண்டாடும் விதமாக இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில், உலக நாடுகள், தங்களுடைய இராணுவக் குழுவினை இங்கு அனுப்பி வைத்து இருந்தனர்.

இரண்டாவது உலகப் போரில், நாசிப் படையினை எதிர்த்து பல நாடுகள் கூட்டாக இணைந்துப் போரிட்டன. அதில், இங்கிலாந்து இராணுவமும் போரிட்டது. அப்பொழுது, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவும் தன்னுடைய வீரர்களை போருக்காக அனுப்பியது. அந்தப் போரில் 87,000 பேர் வீரமரணம் அடைந்தனர். பல ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.

இந்த போரில் கிடைத்த வெற்றியினை, ஒவ்வொரு ஆண்டும் ரஷ்ய அரசாங்கம் கொண்டாடி வருகின்றது. அந்நாட்டு இராணுவத்தின் சார்பில், 2 கோடி வீரர்கள் இந்தப் போரில் பங்கேற்றனர். அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், உலக நாடுகளுடன் இணைந்து வென்றதைக் கொண்டாடும் விதமாகவும், இதனை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றது ரஷ்யா.

இதற்காக, இந்த ஆண்டும் இந்தியாவின் 75 வீர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றனர். அவர்களுடன் இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சென்றார். அவர் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்திய வீரர்கள் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பல நாடுகளின் முன்னிலையில் மிடுக்காக நடந்தனர். இது பார்ப்பவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

HOT NEWS