7 நாட்களில் உயர்ந்த இந்தியாவின் இராணுவ வலிமை! தொடரும் ஏவுகணை சோதனை!

12 October 2020 அரசியல்
missiletest.jpg

கடந்த 7 நாட்களில் மட்டும் இந்தியாவின் இராணுவ வலிமையானது, பல மடங்கு உயர்ந்துள்ளதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 35 நாட்களாக, ஒடிசாவில் உள்ள வீலர் தீவு உட்படப் பல இடங்களில், இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பானது ஏவகணை சோதனைகளைச் செய்த வண்ணம் உள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் பகுதியில் மோதல் நடைபெற்று வருகின்றது. இதனால், இந்திய அரசு, அவசரக் கால நடவடிக்கையாக, பல நாடுகளிடம் இருந்தும் ஆயுதங்களை வாங்கி, குவித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் அனைத்தும், தற்பொழுது சோதிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரத்தில் மட்டும் சூப்பர்சோனிக் ஏவுகணை மற்றும் சௌரியா ஏவுகணையானது சோதிக்கப்பட்டது. இரண்டும் தங்களுடைய இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கி அழித்ததைத் தொடர்ந்து, அந்த ஏவுகணைகளின் சோதனைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. தற்பொழுது அந்த இரண்டு ஏவுகணைகளும் தற்பொழுது இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டு உள்ளன.

இந்த இரண்டு ஏவுகணைகளைத் தவிர்த்து, இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பானது, பல ஏவுகணைச் சோதனைகளை செய்துள்ளதாகவும், அவைகளும் தற்பொழுது இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, இவ்வாறு ஏவுகணைகளும், ஆயுதங்களும் வாங்கிக் குவிக்கப்பட்டு வருவதால், கடந்த 7 நாட்களில் யாரும் கணிக்க முடியாத விதத்தில் இந்தியாவின் இராணுவ வலிமையானது அதிகரித்து உள்ளது.

HOT NEWS