வாட்ஸ் ஆப்பில் பாகிஸ்தான் குழுக்கள்! இந்திய இராணுவம் பொதுமக்களுக்கு அறிவுரை!

23 November 2019 அரசியல்
whatsappwarning.jpg

வாட்ஸ் ஆப் மூலம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் பொய்யானத் தகவல்களைப் பரப்புவதாக இந்திய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

+923032569307 என்ற எண் மூலம், வாட்ஸ் ஆப்பில் குரூப் ஆனது செயல்பட்டு வருகின்றது. இந்த எண்ணில் இருந்து, ஒரு சில குறிப்பிட்ட மெசேஜ்கள் உங்களுக்கு வரும். பின், நீங்கள் அதில் தானாகவே இணைக்கப்படுவீர்கள். இது பற்றி எச்சரித்துள்ள இராணுவம், இராணுவ வீரர்கள் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும், உங்கள் குடும்பத்தாரினை இந்தக் குரூப்பில் அந்த குழு இணைத்து உங்களை மிரட்ட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

வாட்ஸ் ஆப் செட்டிங்சில் அக்கவுண்ட் என்றப் பட்டனை கிளிக் செய்து, அதில் பிரைவசி என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். பின்னர், அதிலுள்ள குரூப் என்ற பட்டனை அழுத்தினால், சேன்ஜ் செட்டிங்ஸ் என்ற பகுதிக்கு செல்லும். அதில் சேஜ் செட்டிங்ஸ் டூ மை காண்ட்டாக்ட்ஸ் என மாற்றிக் கொள்ள வேண்டும், எனவும் இந்திய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் வைரஸினைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தற்பொழுது சூடுபிடித்துள்ளது.

HOT NEWS