இந்தியாவில் உள்ள வௌவால்களுக்கு கொரோனா தொற்று!

15 April 2020 அரசியல்
coronabat.jpg

இந்தியாவில் உள்ள நான்கு மாநிலத்தினைச் சேர்ந்த வௌவால்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. மனிதர்களிடம் இருந்து மிருகங்களுக்குப் பரவாது என இந்திய மருத்துவ மையம் கூறியிருந்தது. ஆனால், சீனா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் தொற்றானது, மனிதர்களிடம் இருந்து, மிருகங்களுக்குப் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதே போல், தமிழகம், புதுச்சேரி, கேரளா, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வௌவால்களிடம் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வௌவால்களின் கழுத்துப் பகுதியில் இருந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதனைப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில், இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. சீனாவில் வௌவால்களிடம் இருந்து தான், இந்த வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டது என, முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தியாவின் பிறப் பகுதிகளினைச் சேர்ந்த வௌவால்களின் இரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், அந்த எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பது உறுதியானது.

HOT NEWS