இந்தியாவின் முக்கியப் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்!

17 December 2019 அரசியல்
studentsprotest.jpg

நாட்டின் முக்கிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில், குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் ஞாயிற்றுக் கிழமை அன்றுப் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது, கண்ணீர் புகைகுண்டு வீச்சு, தடியடி உட்பட்டவைகளை நடத்தினர்.

இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி போலீசைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள டெல்லி பல்கலைக் கழகம், மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதே போல், சண்டிகரில் பஞ்சாப் பல்கலைக் கழக மாணவர்கள், லக்னோவில் உள்ள தாரூல் உல்லூம் நத்வாதூல் உலாமா கல்லூரி மாணவர்கள், அலிகார்க் ஏஎம்யூ மாணவர்கள், பாட்னா பல்கலைக்கழக மாணவர்கள், கௌகாத்தி ஏஏஎஸ்யூ சத்யகிரக மாணவர்கள், கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் அஹமதாபாத் ஐஐஎம் அஹமதாபாத் மாணவர்கள், வாரணாசியின் பிஹெச்யூ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பையின் டிஐஎஸ்எஸ் மாணவர்கள், மும்பை பல்கலைக்கழக மாணவர்கள், பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக மாணவர்கள், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள், ஹைதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக் கழக மாணவர்கள், ஒஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள், சென்னை ஐஐடி கல்லூரி மாணவர்கள், மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தற்பொழுது ஆர்பாட்டம், சாலை மறியல், வகுப்புப் புறக்கணிப்பு, மனித சங்கிலிப் போராட்டம் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

HOT NEWS