கொரோனாவை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்! இந்திய நிறுவனம் அசத்தல்!

04 April 2020 அரசியல்
coronatest.jpg

இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த நோயால் தற்பொழுது வரை, 68 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்நிலையில், இந்த நோயினைக் கண்டுபிடிக்கும் கருவிகளை இந்திய நிறுவனங்கள், போட்டிப் போட்டுக் கொண்டு உருவாக்கி வருகின்றனர்.

ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தே கொரோனா வைரஸ் இருக்கின்றதா என்பதைக் கண்டுபிடிக்கும் கருவிகளானது, மத்திய அரசால் வாங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த வாரம் தனியார் மருத்துவ நிறுவனம் ஒன்று, புதியக் கருவியினைக் கண்டுபிடித்தது. அந்தக் கருவிக்கு மத்திய சுகாதாரத் துறை, அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து, மற்றொரு நிறுவனமும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம், புதியக் கருவியினை உருவாக்கி உள்ளது. போபால் நகரினைச் சேர்ந்த 3பி பிளாக்பயோ பயோடெக் பி லிமிட் என்ற நிறுவனம் தான் இந்தக் கருவியினை உருவாக்கி உள்ளது. இதற்கு ஏப்ரல் 2ம் தேதி அன்று, மத்திய சுகாதாரத் துறையானது ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதுக்குறித்துப் பேட்டியளித்துள்ள அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரிக் கூறுகையில், இந்த உலக சுகாதார அமைப்பின் வழிமுறைகளைப் பின்பற்றி, அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் உருவாக்கி உள்ளோம். இந்தக் கருவியானது, மிக விரைவாக பதில் அளித்துவிடும். இதன் மதிப்பானது, 1000 ரூபாய்க்குள் இருக்கும் விதத்தில் உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம் என்று கூறியுள்ளார். இந்த நிறுவனம், ஏற்கனவே பன்றிக் காய்ச்சலைக் கண்டறிவதற்கான கருவியினை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS