இந்தியாவின் புதிய கொரோனா மருந்து! ஆகஸ்ட் 15ல் வெளியாக வாய்ப்பு!

03 July 2020 அரசியல்
covid19medicine.jpg

இந்தியாவின் சார்பில் புதிய கொரோனா மருந்தானது, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை, வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டு உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸால், ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐந்தரை லட்சம் பேர் வரை, இந்த வைரஸால் மரணம் அடைந்து உள்ளனர். இந்த வைரஸானது, இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸால் இந்தியாவில் தற்பொழுது ஆறரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 18,000க்கும் அதிகாமனோர் பலியாகி உள்ளனர்.

இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகின் பல நாடுகள் முயற்சி செய்து வருகின்றனர். இதில் இந்திய மருத்துவ நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில், தற்பொழுது கோவாக்ஸின் என்ற மருந்தானது, தயாரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதே போல், தற்பொழுது புதிய மருந்தானது தயார் நிலைக்கு வந்துள்ளது. இந்தியாவின் ஐசிஎம்ஆர் அமைப்பானது, பாரத் பயோடெக் இன்டெர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து புதிய மருந்து ஒன்றினை உருவாக்கி உள்ளது.

இந்த மருந்தினை, புனேவில் உள்ள வைரஸ் ஆய்வுக் கழகத்தில் தயார் செய்து உள்ளனர். இந்த மருந்தானது, தற்பொழுது மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் 12 இடங்களில், இந்த மருந்தானது சோதனை செய்யப்பட உள்ளது. இந்த மருந்தினை அதிவிரைவு சோதனைக்கு உட்படுத்தத் திட்டமிட்டு உள்ளனர். வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட்டு, பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக, ஐசிஎம்ஆர் திட்டமிட்டு உள்ளது.

எவ்வாறு இருப்பினும், அனைத்துப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே, இந்த மருந்தானது பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும் என்றுக் கூறப்படுகின்றது. இந்த மருந்தினை ஐஎம்எஸ் மற்றும் எஸ்யூஎம் மருத்துவமனைகள் தவிர்த்து, தமிழகத்தின் காட்டான்குளத்தூர் மருத்துவமனை, கர்நாடகாவின் பெல்காம், நாக்பூர், கோரக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், உபி கான்பூர், கோவா, விசாகப்பட்டினம், புது டெல்லி மற்றும் ரோக்தாக் உள்ளிட்டப் பகுதிகளில் சோதனை செய்யப்பட உள்ளது.

இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டுக் கழகமானது, நேற்று இந்த மருந்தினை இரண்டு கட்டப் பரிசோதனைகளுக்கும் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவின் மருந்து தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் நிறுவனமான, சைடஸ் காடில்லா நிறுவனமும் தற்பொழுது சோதனையில் ஈடுபட உள்ளது. அதன் மருந்தானது, நோய் எதிர்ப்பு சக்தியினை உடையதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும், மிருகங்களின் மீது சோதிக்கப்பட்டதில், நல்ல முடிவும் வெளியாகி உள்ளது.

இந்த நிறுவனமும் தன்னுடைய மருந்தினை, வேகமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. தற்பொழுது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 1000 பேரிடம் சோதனை செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

HOT NEWS