மோசமான நிலையில், இந்தியப் பொருளாதாரம்! நிதி ஆயோக் துணைத் தலைவர் எச்சரிக்கை!

23 August 2019 அரசியல்
rajivkumar.jpg

கடந்த ஏழுபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக, இந்தியாவின் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்வ குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த நிகழ்ச்சியல் பேசிய அவர், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்த நிதித் துறையும் இத்தகைய சூழலில் மாட்டியதில்லை. பிரச்சனை நிதித்துறையில் உள்ளது என்பதை உணர்ந்தால், அதற்கு சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும், தனியார் நிறுவனங்களின் பிரச்சனைகள் உற்று நோக்க வேண்டும்.

இந்தப் பொருளாதார நிலைமை, மிகவும் மோசமானப் பாதையை நோக்கிச் செல்கிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், மிக மோசமானப் பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். யாரும் யாரையும் நம்பிப் பணத்தை தருவதுமில்லை, முதலீடு செய்யவும் தயங்குகின்றனர்.

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, ஐபிசி ஆகியத் திட்டங்களின் காரணமாக, இந்தியப் பொருளாதாரம் மளமளவென சரிவை சந்தித்துள்ளது. என்று கூறியுள்ளார். இந்நிலையில், இந்தியாவின் நொமூரா என்ற பொருளாதார அமைப்பு கூறுகையில், இந்தியாவின் ஜிடிபி முதல் காலாண்டில், 5.7% கீழாக செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

HOT NEWS