சீன எல்லைக்குப் படையெடுக்கும் இந்திய போர் விமானங்கள்!

06 July 2020 அரசியல்
fighterjet.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளதால், இந்தியாவின் விமானப்படைப் போர் விமானங்கள் தற்பொழுது லடாக் பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூன் 15ம் தேதி நள்ளிரவு, இந்திய இராணவ வீரர்கள் மீது சீன இராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியாவின் சார்பில், 20 வீரர்கள் பலியாகினர். சீனாவின் தரப்பிலும் வீரர்கள் பலியானதாகவும், இருப்பினும் எத்தனைப் பேர் என்பதை சீன தெரிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தன்னுடைய 30,000 போர் வீரர்களை சீன இராணுவம், பதற்றத்திற்குரிய கிழக்கு லடாக் பகுதிக்கு அனுப்பியுள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவின் வீரர்களும் தற்பொழுது அங்கு குவிக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசாங்கம், தற்பொழுது பல்வேறு நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், புதிய போர் கருவிகளையும், விமானங்கள் மற்றும் ஏவுகணைகளையும் வாங்கி வருகின்றது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது இந்தியாவின் விமானப் படை போர் விமானங்கள், கிழக்கு லடாக் பகுதிக்கு அருகில் உள்ள விமானப்படை தளத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன.

சுகோய் ரக போர் விமானங்களும், மிக் ரக போர் விமானங்களும் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பெரிய ஹெலிகாப்டர்கள், போர் ஹெலிகாப்டர்களை எடுத்துச் செல்லும் விமானங்களும், ராட்சத டாங்கிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் விமானங்களும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்திய இராணுவமும், கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய இராணுவத் துறுப்புக்களை, சீனாவிற்கு எதிராக, கிழக்கு லடாக் பகுதியில் நிலைநிறுத்தி வருகின்றது.

HOT NEWS