இந்தியாவின் முதல் தனியார் இரயில்! டெல்லியில் செயலுக்கு வந்தது!

06 October 2019 அரசியல்
tejeshexpress.jpg

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான, இந்தியன் ரயில்வேயால், இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் முறையாகப் பராமரிக்க இயலவில்லை. இதன் காரணமாக, பல ரயில் நிலையங்களையும், ரயில்வே தடங்களையும் தனியாருக்கு டென்டர் முறையில் தர முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், லக்னோவில் இருந்து டெல்லி ரயில்நிலைத்திற்கு, விரைவு ரயில் சேவையானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை உத்திரப் பிரதேசத்தின் மாநில முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் பச்சைக் கொடி காட்டி துவக்கி வைத்தார். இதற்கு, தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த ரயிலில் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு, பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே நிறுவனமான ஐஆர்சிடிசி. இந்த ரயிலில் பயணம் செய்யும் அனைவருக்கும், 25 லட்ச ரூபாய் இலவசக் காப்பீடு வழங்கப்பட உள்ளது. மேலும், ரயில் வர ஒரு மணி நேரம் தாமதம் ஆனால், சுமார் 100 ரூபாயை திரும்பித் தர இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

ஒரு வேளை, இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஆனால், 250 ரூபாய் பணத்தைத் திருப்பி தருவதாகவும் கூறியுள்ளது. வாரத்தின் செவ்வாய் நாளைத் தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரயில் செயல்பட உள்ளது. காலை 6.10 மணிக்கு லக்னோவில் இருந்து புறப்படும் இந்த ரயில், டெல்லியை 12.25 மணிக்கை சென்றடையும்.

மேலும், 3.35 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் ரயில், லக்னோவினை 10.35 மணிக்கு வந்தடையும். இடையில், கான்பூர் மற்றும் காஷியாபாத் நிலையங்களில் மட்டுமே நிற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. சுமார் 6 மணி 10 நிமிடத்தில் துல்லியமாக ரயில்வே நிலையத்தினை அடையும் விதத்தில், இந்த தனியார் இரயில் ஓட உள்ளது.

HOT NEWS