காணாமல் போகும் இந்தியப் பொருளாதாரம்! கடவுள் காப்பாற்றுவாரா?

03 September 2020 அரசியல்
nirmalasitharamanyesbank.jpg

கொரோனா வைரஸ் பரவியதற்கு, கடவுளின் செயலேக் காரணம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளத் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்தியாவின் ஜிடிபியானது, நாளுக்கு நாள் கீழ் நோக்கியே சென்று கொண்டு இருக்கின்றது. தற்பொழுது இந்தியாவின் ஜிடிபியானது -23.9% ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இருந்து கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இதனால், உலகளவில் பல நாடுகளில், ஊரடங்கானது அமலில் உள்ளது. தற்பொழுது பல நாடுகள், நாட்டின் பொருளாதாரத்தினைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் பலத் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், ஏற்கனவே 3% குறைவாக இருந்த இந்தியாவின் ஜிடிபியானது, தற்பொழுது -23.9 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத, மிகப் பெரிய வீழ்ச்சியாகும். இதனைக் கருத்தில் கொண்டு, பல ஒழுங்கு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகின்றது. எனினும், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் எனவும், வியாபாரம் மற்றும் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் பலரும் தங்களுடையக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கட்டுமானத் தொழிலானது, 50% கீழாகச் சென்றுள்ளது எனவும், விவசாயத் துறை மட்டும் 3% வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, பொருட்கள் மீது விதிக்கப்படும் அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக, இந்தியர்களின் வாங்கும் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

HOT NEWS