இந்தியாவின் ஜிடிபி 1.5 % டூ 4% ஆக இருக்கும்! உலக வங்கி கணிப்பு!

13 April 2020 அரசியல்
growthdecrease.jpg

இந்தியாவின் ஜிடிபியானது 1.5 சதவிகிதத்தில் இருந்து, 4 சதவிகிதமாக இருக்கும் என, உலக வங்கி கணித்துள்ளது.

ஒவ்வொரு காலாண்டு காலத்திற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வணிகம், வர்த்தகம் உள்ள்ளிட்டவைகளை கணக்கிட்டு வருகின்ற உலக வங்கியும், சர்வதேச நிதி நிர்ணய அமைப்பும். இந்த காலண்டின் பொழுது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எந்த அளவில் இருக்கும் என, உலக வங்கி கணித்துள்ளது.

தற்பொழுது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், இந்தியாவின் அனைத்து நிறுவனங்களும், மூடப்பட்டு உள்ளன. பெரிய அளவில், இந்தியாவின் பொருளாதாரம் தற்பொழுது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பலரும் வேலை இழக்கும் வாய்ப்புகளும் உள்ளன. சிறு குறு தொழில்கள் நசுங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டு உள்ளன.

இவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் நடப்புக் காலாண்டின் வளர்ச்சி விகிதமானது, கணிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தியாவின் ஜிடிபியானது 1.5% இருந்து 4% வரை இருக்க வாய்ப்புள்ளதாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளை இயக்குவதன் மூலம், முக்கிய நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம், இந்தியாவின் ஜிடிபியானது 4 முதல் 5% வரை இருக்கலாம் எனவும், ஆனால் தற்பொழுது லாக்டவுன் காரணமாக, அது கேள்விக்குறியான விஷயமாகும் எனவும் கூறியுள்ளது.

தங்கமும் தற்பொழுது விற்பனையாகாத காரணத்தினால், ஊரடங்குத் தளர்த்தப்பட்ட பின், கண்டிப்பாக அதன் விலையானது அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கருதியுள்ளது.

HOT NEWS