இந்தியாவில் உள்ள ஆண்கள், காண்டம் பயன்படுத்துவதை விரும்புவதில்லை என, ஆய்வின் முடிவுத் தெரிவிக்கின்றது. இது குறித்து என்எப்ஹெச்எஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள ஆண்கள் 97.9% பேர் பாலியல் உடலுறவுக்குத் தகுதியானவர்கள். அவர்களில், 94% பேருக்கு காண்டம் என்பதனைப் பற்றி, தெளிவாகத் தெரியும்.
ஆனால், அதனை கடைக்குச் சென்று வாங்குவதில் விருப்பம் இல்லாததால், காண்டம் பயன்படுத்த மறுக்கின்றனர். மேலும், இதன் காரணமாக, பெண்கள் குழந்தைகள்ப் பெற்று எடுத்ததும், அவர்களை குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள அறிவுறுத்துகின்றனர் என அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்தியாவில் காண்டம் விற்கும் நிறுவனங்கள், பல வெரைட்டிகளில் விற்கின்றன. பனனா, ஸ்ட்ராபெர்ரி, சாக்கோலேட், டாட்டட், எக்ஸ்ட்ரா டாட்டட், லுபிரிக்கேட்டட், எக்ஸ்ட்ரா லுபிரிக்கேட்டட் என, இது போன்ற விதமான காண்டம்களை விற்றாலும், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று கவலைத் தெரிவித்துள்ளது.