இந்தியக் கடற்படையினைச் சேர்ந்த 21 மாலுமிகளுக்கு, கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. வருகின்ற மே-3ம் தேதி வரை, இந்த ஊரடங்கானது அமலில் இருக்க உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடைகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, ஊரடங்கினைக் கடைபிடிப்பதன் மூலம், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இயலும்.
இதனையடுத்து, மும்பையின் கடற்படைத் தளத்தில் பணியில் இருக்கும், 21 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், அவர்கள் வெளியில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் சென்றுள்ளனர். இவர்கள் அங்குள்ள கடற்படை குவார்ட்டர்ஸின், மேற்குப் பகுதியில் தங்கியிருந்தனர்.
இவர்களுக்குக் கொரோனா வைரஸ் பரவி இருப்பது, சோதனைகள் மூலம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, இவர்களை கடற்படை மருத்துவமனையில் அனுமதித்து தனிமைப்படுத்தி, சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் தங்கியிருந்து குடியிருப்பில் இருப்பவர்களிடமும், சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.