தயாராகும் இந்திய ரயில்கள்! மத்திய அரசு தீவிரம்!

30 March 2020 அரசியல்
railwayisolation.jpg

இந்தியாவில் உள்ள ரயில்கள் அனைத்தும் தற்பொழுது கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தற்பொழுது வரை 1024 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 70க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து உள்ளனர். 27 பேர் இந்த வைரஸ் பாதிப்பினால், உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வருங்காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற காரணத்தினால், மருத்துவமனைகளைத் தயார் செய்ய, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இவைகளுக்கு எல்லாம் ஒரு படி மேலாக, இந்திய இரயில்வேக்குச் சொந்தமான இரயில்கள் பலவும், தற்பொழுது மருத்துவமளிக்கும் அறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

தற்பொழுது வரை 7,000 பேருக்கு சிகிச்சை அளிக்கும் விதத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளானது, இந்த இரயில்களில் உருவாக்கப்பட்டு உள்ளது எனவும், தேவைப்படும் பட்சத்தில் விரைவில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். இதுவரை, உலகில் எவ்வித அரசாங்கமும் இவ்வித முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இதுவே முதல்முறை.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு அதிகளவில் இடம் தேவைப்படும் என்பதால் இந்த முயற்சியினை இந்திய இரயில்வேயின் உதவியுடன், மத்திய சுகாதாரத் துறை உருவாக்கி உள்ளது.

HOT NEWS