செப்டம்பர் 30ம் தேதி வரை, இந்திய அளவில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அளவில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுப் போக்குவரத்தானது முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலும் ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் பல லட்சம் புலம்பெயரும் தொழிலாளர்கள், சாலைகளில் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே, தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதில் பலர் மரணமடைந்தனர். இவர்களைக் கருத்தில் கொண்டு, ஸ்ராமிக் எனும் சிறப்பு ரயில்கள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு இந்தியன் ரயில்வே இயக்கியது. சுமார் 250 ரயில்கள் இதற்காக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வரை ஸ்ராமிக் ரயில்களைத் தவிர்த்து, எக்ஸ்ப்ரஸ், பேசஜ்ஜர் உள்ளிட்ட சாதாரணப் பயணிகள் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றுக் கூறப்பட்டு வருகின்றது. இதனை வைத்துப் பார்க்கும் பொழுது, வருகின்ற செப்டம்பர் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.