ஆட்குறைப்பு நடவடிக்கையில் இந்திய இரயில்வே! அப்போ தனியார் நிறுவனங்களின் எதிர்காலம்?

22 July 2020 அரசியல்
indianrailways.jpg

தற்பொழுது செலவுகள் மற்றும் நஷ்டம் ஆகியவற்றினைத் தடுக்கும் பொருட்டு, ஆட்குறைப்பு நடவடிக்கையில் இந்தியன் இரயில்வே இறங்கி உள்ளது.

இந்தியாவின் மிகப் பெரியப் பொதுத்துறை நிறுவனமான இந்திய இரயில்வேயானது, தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயம் ஆக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது தனியார் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கின் காரணமாக, இந்திய இரயில்வே இரயில்களை பெருமளவில் இயக்காமல் உள்ளது. ஸ்ராமிக் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில், தற்பொழுது 60,000க்கும் அதிகமான இரயில்வே காலிப்பணியிடங்களை நீக்க, இந்திய இரயில்வே முடிவு செய்துள்ளது. ரயிலகள் இயக்கப்படாமல் உள்ளதால், அதன் வருவாய் 40 முதல் 70% குறைந்துள்ளது. இதனால், அந்த அமைப்பின் ஊழியர்களுக்கு வருவாய் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வங்கியில் உள்ள சேமிப்பினைப் பயன்படுத்தி வருவாயினை வழங்கி வருகின்றனர். இதனால், இந்தியன் இரயில்வே தற்பொழுது சிக்கலில் உள்ளது.

இதனையடுத்து, பாதுகாப்பு சம்பந்தப்படாத பிரிவுகளில் இருந்து 60,000 வேலைவாய்ப்புகளை குறைக்க இரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து இரயில்வே ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தற்பொழுது 232 இரயில்களை தனியார் வசம் ஒப்படைக்க இரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால், இன்னும் ஆட்குறைப்பு நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மிகப் பெரியப் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே அமைப்பே, ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் செயல்படும் சிறு மற்றும் குறு நிறுவனங்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற சந்தேகம் பலருடைய மனதில் எழுந்துள்ளது.

HOT NEWS