இந்தியர்களை மீட்க இன்று மருத்துவக் குழு சீனா செல்கின்றது!

31 January 2020 அரசியல்
aircraftmissing.jpg

சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க, தற்பொழுது சீனாவிற்கு செல்கின்றது மத்திய மருத்துவக் குழு.

தற்பொழுது சீனாவில் பரவி வரும் கொரனா வைரஸ் காரணமாக, பலரும் தங்களுடைய சொந்த நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவினைச் சேர்ந்த 325 இந்தியர்கள் ஊஹான் பகுதியில் இருக்கின்றனர். அவர்கள் தங்களைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களுடைய கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, சீனாவிடம் அனுமதி கேட்டது.

அங்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, போயிங் 747 என்ற பெரிய விமானத்துடன், சிறப்பு மருத்துவக் குழுவினை அனுப்புகின்றது மத்திய அரசு. இந்தக் குழுவில் இரண்டு, தேர்ச்சிப் பெற்ற மருத்துவர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் சீனாவிற்கு விமானத்தில் சென்று, அங்குள்ள இந்தியர்களை ஆய்வு செய்து பின் மீட்டு வர உள்ளனர். தற்பொழுது, இந்த விமானத்தில் மருத்துவப் பொருட்களை நிரப்பும் பணியானது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. விரைவில் இந்த விமானம், சீனாவிற்கு செல்ல உள்ளது.

ஏற்கனவே, கேரளாவில் இந்த கொரனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, பெண் மாணவி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இதனிடையே, சீனாவுடனான எல்லைப் பகுதியினை, ரஷ்ய அரசாங்கம் மூடியுள்ளது. சீனாவில் இந்த வைரஸ் தொல்லை முடிந்த பிறகே, தன்னுடைய எல்லைப் பகுதியினை திறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS