நாம் எவ்வளவு தான் இளநீர் பருகுங்கள். குளீர் பானங்களைத் தவிர்த்திடுங்கள் எனக் கூறினாலும், இன்று வரை நம் இந்தியாவில் குளீர் பானங்களின் விற்பனை படு ஜோராகத் தான் நடந்து வருகிறது. இதில் வெறும் சொற்ப கம்பெனிகளே வியாபாரத்தில் உள்ளன என்றாலும், அவை சம்பாதிக்கும் தொகை அளவிட முடியாதது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சி மற்றும் கோக்கா கோலா கம்பெனிகளின் குளீர் பானங்களே இந்தியாவில் அதிகளவில் விற்கப்படுகின்றது.
10. Mountain Dewஇதுவும் பெப்சியின் ஒரு படைப்பு ஆகும். இது கிட்டத்தட்ட சோடாவின் ரகம் ஆகும். இது இந்தியாவில் பரவலாக இளைஞர்களால் பருகப்படுகிறது. இது சரியான விளம்பரம் மற்றும் தரத்தின் காரணமாக விரைவாக நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது.
9. Mirandaஇதையும் தயாரித்து விற்பது பெப்சி கம்பெனியே. இது இந்தியாவல் பத்து வருடங்களுக்கும் மேலாக உள்ள ஒரு குளிர்பானம் ஆகும். இது ஆரஞ்சு நிறத்தில் மட்டுமின்றி இதன் சுவையும் கிட்டத்தட்ட ஆரஞ்சுப் பழத்தின் சுவையை ஒத்தே இருக்கிறது. ஆனால், இது முழுக்க முழுக்க செயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்ற ஒரு பானம் ஆகும்.
8. Thums Upஇதனை கோகா கோலா தயாரித்து விற்கிறது. இதன் விளம்பரங்களில் பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இது கிட்டத்தட்ட Mountain Dewவிற்குப் போட்டியாக இந்தியாவில் இது இருந்து வருகிறது. எனினும், இதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம்.
7. Maazaஇதனை பார்லி ஆக்ரோ நிறுவனம் தயாரித்து விற்று வருகிறது. இதுவே, இந்தியாவில் அதிகமாக விற்கப்படும் குளிர்பானம் ஆகும். இதில் அல்போன்சா மாம்பழத்தின் சுவை இருக்கிறது என விளம்பரம் செய்கின்றனர். எனினும், இதுவும் முழுக்க முழுக்க இரசாயனங்களால் உருவாக்கப்படும் ஒரு குளிர்பானம் ஆகும்.
6. Sliceஇதனை பெப்சிகோ நிறுவனம் தயாரித்து விற்று வருகிறது. இது மாஸாவிற்குப் போட்டியாக தயாரிக்கப்பட்ட ஒரு குளிர்பானம் ஆகும். இது மாஸா அளவிற்கு இல்லாவிட்டாலும், இதுவும் சுவையாகவே இருந்து வருகிறது. அதே சமயம், இதன் விற்பனை அளவும் மாஸா அளவிற்கு இல்லை என்றாலுஃ, இதன் வியாபாரம் உலகளாவியது என்பதால், இது ஆறாம் இடத்தில் உள்ளது.
5. Fantaஇதனை அதிகளவில் கோகா கோலா நிறுவனம் தயாரித்து விற்று வருகிறது. மிகவும் புதுப் பொலிவுடன் காணப்படும் இதன் விளம்பரங்கள் மற்றும் வியாபாரம் அனைவரையும் வியக்க வைக்கும் அளவில் இந்தியாவில் இருந்து வருகிறது. உண்மையில் இது மிராண்டாவிற்குப் போட்டியாக விற்பனைக்கு வந்தது என்றாலும், இது தற்போது மிராண்டாவை பின்னுக்குத் தள்ளிவிட்டது.
முதலில் இந்தக் குளிர்பானம் இந்தியரால் ஆரம்பிக்கப்பட்டது என்றாலும், பின்னர் இதனை கோகா கோலா நிறுவனம் கைப்பற்றிவிட்டது. இப்பொழுத வெயில் பிரதேசங்களில் அதிகளவில் இந்தக் குளிர்பானம் விற்கப்படுகிறது. பெரும்பாலும், டெல்லி, ஹரியானா போன்ற மாநிலங்களில் இது அதிகமாக விற்பனையாகிறது.
3. 7Upஇதனை அனைவரும் பருக ஆரம்பித்துவிட்டனர். என்றேக் கூறலாம். அனைத்து வயதினரும் விரும்பிப் பருகும் பானமாhக இது இருந்து வருகிறது.இதனைத் தயாரித்து பெப்சிகோ நிறுவனம் விற்று வருகிறது. பெரும்பாலான "குடிமக்கள்" இதனை சரக்கில் கலந்து குடித்து வருகின்றனர். இது செரிமானத்திற்கு உதவும் வகையில் உள்ளதால், நிறைய சாப்பிட்டவுடன் செரிமாணத்திற்குக் குடித்தல் நன்று.
2. Coca-Colaஇதனைப் பருகாதவர் இவ்வுலகில் இல்லை என்றேக் கூறலாம். நம் நாட்டில் இதனைப் பலமுறைத் தடை செய்தும் தடையை விலக்கியும் இருக்கின்றனர். இதனை இன்றும் விற்பனைக்கு இந்தியா அனுமதித்துள்ளது என்றால் அதன் மதிப்பையும் மற்றும் அதன் ஆதிக்கத்தையும் நீங்களேப் புரிந்து கொள்ளுங்கள்.
1. Pepsiஇது இந்தியாவில் அதிகமாக விற்பனையில் உள்ள ஒருக் குளிர்பானம் ஆகும். இருப்பினும், தற்பொழுது இதன் மார்க்கெட் சற்று ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது. இதையும், நம் அரசாங்கம், பல முறை தடை செய்தும், பின்னர் தடையை நீக்கியும் இருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பின் இதன் விற்பனை இந்திய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடியாத விஷயம் என்றாலும், அதுவே உண்மை ஆகும்.
விளம்பரத்தில் கூறுவது போல், இந்த குளிர்பானங்கள் பல வித சுவைகளில் இருந்தாலும், இவை அனைத்தும் ரசாயனத்தின் மூலமேத் தயாரிக்கப்படுகிறது. மேலும், இவற்றை, அதிகம் குடிப்பது நாம் நம் உடலுக்குச் செய்யும் தீங்கு ஆகும்.