60 பேர் பயணம் செய்த இந்தோனேசியாவின் பயணிகள் விமானமானது, கடலின் மேல் பறக்கும் பொழுது மாயமாகி உள்ளதால், பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்ட்டாவில் இருந்து அந்நாட்டின் பொன்டியநாக் நகர் நகருக்கு, SJ182 என்றப் பெயருடைய போயிங் 737-500 என்ற விமானமானது, பிற்பகல் 1.25 மணியளவில் தன்னுடையப் பயணத்தினைத் தொடங்கியது. இந்த விமானம் தன்னுடையப் பயணத்தினைத் தொடங்கி, வானில் சுமார் 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
அப்பொழுது, தரைதளத்துடன் இருந்து வந்த சிக்னல் தொடர்பானது துண்டானது. இதனால், விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பல முறை, அந்த விமானத்தினைத் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். இருப்பினும், எவ்வித பயனும் ஏற்படவில்லை. அந்த விமானமானது, இந்தோனேஷியாவின் ஜகார்ட்டா வளைகுடாவிற்கு மேல் பறக்கும் பொழுது மாயமானது. இந்த விமானமானது, கடலுக்குள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தற்பொழுது கிடைத்துள்ளத் தகவலின் படி, அந்த விமானத்தில் 6 குழந்தைகள், விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 59 நபர்கள் பயணம் செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. தொலைந்து போன விமானத்தினைத் தேடும் பணியானது, முடுக்கிவிடப்பட்டு உள்ளது.