INFINIX NOTE 7 பட்டைய கிளப்புது! 128 ஜிபி ரோம் 6ஜிபி ரேம்! 9,500 ரூபாய் தான்!

31 August 2020 தொழில்நுட்பம்
infinixnote7.jpg

இந்தியாவில் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் விற்பனையானது, படுஜோராக நடைபெற்றுக் கொண்டே உள்ளது. அந்த அளவிற்கு, இந்தியாவில் கொரோனா வைரஸ் காலத்தில் கூட, இந்த ஸ்மார்ட்போன் வியாபாரம் கலைக்கட்டிக் கொண்டு தான் இருக்கின்றது.

இதனை நம்பி, பல நிறுவனங்கள் தங்களுடைய முதலீடுகளைச் செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தற்பொழுது INFINIX என்ற நிறுவனம், இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விற்று வருகின்றது. இது ரியல்மீ மற்றும் ரெட்மீ உள்ளிட்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு போட்டியாக மாறி வருகின்றது. அந்த நிறுவனம் தற்பொழுது புதிய மாடல் ஒன்றினை உருவாக்கி உள்ளது. INFINIX NOTE 7 என்ற மாடல் தான், தற்பொழுது ஸ்மார்ட்போன் உலகின் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன், வெறும் 9,500 ரூபாய் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த போன் எப்படியும் செப்டம்பர் 2020ம் ஆண்டு, விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே, பாகிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில், இது விற்பனைக்கு வந்துவிட்டது. இந்த போனில் உள்ள சிறப்பம்சங்களைப் பற்றி சற்று பார்ப்போம்.

INFINIX NOTE 7 பார்ப்பதற்கு மட்டுமின்றி, பயன்படுத்துவதற்கும் பெரிதாகவே உள்ளது. இந்த போன், 6.95” அளவுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் IPS LCD டிஸ்ப்ளே இதில் உள்ளது. இதன் வீடியோவானது 720P X 1640P என்ற அளவில் துல்லியத்தன்மைக் கொண்டது. இந்த ஸ்மார்ட்போனானது BLUE, GREEN மற்றும் WHITE என்ற நிறங்களில் கிடைக்கின்றது.

இந்த போன் XOS என்ற செயல்படும் இயங்கு தளத்துடனும், அதேபோல் ANDROID 10 இயங்குதளத்துடனும் வெளியாக உள்ளது. இந்த போனில் DUAL SIM வசதி உள்ளது. இதன் மூலம், 4ஜி தொலைத்தொடர்பினைப் பயன்படுத்த இயலும். இதில் MEDIATEK HELIO G70, Octa core (2 GHz, Dual core, Cortex A75 + 1.7 GHz, Hexa Core, Cortex A55) என்ற பிராஸ்ஸரும், Mali-G52 கிராபிக்ஸ் பிராஸஸரும் உள்ளதால் பெரிய கேம்களை எளிதாக விளையாட இயலும்.

இந்த ஸ்மார்ட்போனில் SD CARD வசதி உள்ளது இதில் 6GB RAM வசதியும், 128GB INTERNAL MEMORY வசதியும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் 2TB வரை EXPAND செய்ய இயலும். இந்த போனில், மூன்று ப்ரைமரி கேமிராக்கள் உள்ளன. 48MP+2MP+2MP என்ற விதத்தில் மூன்று கேமிராக்கள் QUAD FLASH வசதியுடன் உருவாக்கப்பட்டு உள்ளன. அதே போல் 16MP FRONT கேமிராவும் இணைக்கப்பட்டு உள்ளன.

இவ்வளவு சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போனிற்கு 5000mAh பேட்டரி இணைக்கப்பட்டு உள்ளதால், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நம்மால் இதனைப் பயன்படுத்த இயலும். அதே போல், இந்த போனில் FAST CHARGING வசதி உள்ளதால், மிக விரைவாக சார்ஜ் செய்ய இயலும். இதன் விலையும் மிகக் குறைவாக இருப்பதால், மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை இது கண்டிப்பாக ஓரம் கட்டும் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS