வருகின்ற டிசம்பர் மாதம், தன்னுடைய ஊழியர்களுக்கு போனஸ் வழங்க உள்ளதாக அறிவித்துள்ள இன்போசிஸ் நிறுவனம், ஜனவரி மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
கடந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பானது, கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா காலக் கட்டத்திலும் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் நல்ல விலை உயர்வைக் கண்டுள்ளதால், தன்னுடைய நிறுவன ஊழியர்களை மகிழ்விக்கும் பொருட்டு இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதன்படி, வருகின்ற டிசம்பர் மாதம், தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற ஊழியர்களுக்கு, போனஸ் வழங்க உள்ளது.
அத்துடன், தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவைகளை வழங்கத் திட்டமிட்டு உள்ளது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் சளீல் பரீக், கடந்த காலாண்டில் வாங்கிய சம்பளத்தினைக் காட்டிலும், இந்த உமறை வழங்க உள்ள ஊதிய உயர்வால், 100% சம்பளத்தில் மாற்றம் உண்டாகும். எங்களுடைய வெற்றிக்கு ஊழியர்களே காரணம் என்றுக் கூறியுள்ள அவர், அதற்காக இந்த உயர்வினை பரிசாக வழங்குவதாக தெரிவித்து உள்ளார்.