பொருளாதார மந்த நிலைக்கும், வேலை நீக்கத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால், தற்பொழுது பல ஐடி நிறுவனங்கள் ஆட் குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிடிஎஸ் நிறுவனம், சுமார் 7,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால், ஐடி உலகமே அதிர்ந்தது. இந்நிலையில், இந்தியாவின் முன்னணி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனமும், தன்னுடைய நிறுவனத்தில் இருந்து, சுமார் 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம், செய்தி வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான ஆட்குறைப்பிற்கு முக்கியக் காரணமாக இருப்பது, ப்ராஜெக்ட் இல்லாமல் இருப்பது தான். ஆனால், இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்கு அத்தகையப் பிரச்சனை இல்லை. அதனால், பல்வேறு நிலைகளில் வேலைப் பார்க்கும் ஊழியர்களைத் தான் வேலையில் இருந்து நீக்க உள்ளதாக, அந்நிறுவனம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு மெயில் மூலம் விளக்கமளித்துள்ளது. மேலும், இது சாதாரண விஷயம் என்றும், கவலைப்பட ஒன்றுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனத் தொழிலானது, இந்தியாவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தற்பொழுது ஐடி நிறுவனங்களும் வேலையில் இருக்கும் பணியாளர்களை நிறுத்த ஆரம்பித்து இருப்பது, கவலை அளிக்கும் விஷயமாக பொருளாதார நிபுணர்களால் பார்க்கப்படுகின்றது.