இந்தியாவின் நம்பர் ஒன் ஐடி நிறுவனமும், ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஐடி நிறுவனமுமான இன்போசிஸ், ஒரே நாளில் 53,000 கோடி ரூபாயை நஷ்டத்தினைச் சந்தித்துள்ளது.
ஒரே நாளில், அந்நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 17.40% குறைந்துள்ளது. இது அந்நிறுவனத்திற்கு மிகப் பெரிய அடியாக அமைந்தும் உள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியவர்கள் கிட்டதட்ட 53,000 கோடி அளவிற்கு நஷ்டத்தினை சந்தித்துள்ளனர்.
இது பற்றி, விரிவான விசாரணையை இன்போசிஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. அதே சமயம் டிசிஎஸ், விப்ரோ மற்றும் சிடிஎஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தும் உள்ளன. இதனால், அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளவர்கள், மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.