வலுவடையும் இந்தியக் கடற்படை! கப்பல்கள் நாட்டிற்கு அற்பணிப்பு!

28 September 2019 அரசியல்
insnilgiri.jpg

பிரதமர் நரேந்திர மோடி, 2014ம் ஆண்டு பதவியேற்ற பொழுது, மேக் இன் இந்தியா திட்டத்தினைத் துவங்கி வைத்தார். அப்பொழுது, மும்பை, கொச்சின் உள்ளிட்டப் பலப் பகுதிகளில், இந்தியாவிற்கான பாதுகாப்புப் படைக் கப்பலைக் கட்டும் பணித் துவங்கப்பட்டது.

இந்நிலையில், இன்று, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், மும்பையில் உள்ள மாஸ்கான் கப்பல் கட்டும் தளத்தில் தயாராகி வந்த நீர்முழ்கிக் கப்பலை நாட்டிற்கு அற்பணித்தார். இந்த கப்பலை 2017ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலையில் இந்திய கப்பல் படைக்கு வழங்கப்பட்டது. அதே போல், போர்க்கப்பல் ஐஎன்எஸ் நீல்கிரி என்றக் கப்பலையும் நாட்டிற்கு அற்பணித்தார்.

இது குறித்து பேசிய அவர், இந்த கப்பல்கள் மூலம் எதிரி நாட்டினைரை எல்லைக்குள் விடாமல் தடுக்க இயலும். சுமார் 17 கப்பல்கள் தற்பொழுது உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில், இந்தக் கப்பல்கள் தயாராகிவிட்ட நிலையில், நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் தேசியக் கொடியானது, கடல்களில் பறக்க வேண்டும். அப்பொழுது தான், கடற்பகுதியானது பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினார்.

HOT NEWS