இந்திய உருவாக்கும் போர்க் கப்பலில் கொள்ளை! பொறியாளர்கள் அதிர்ச்சி!

18 September 2019 அரசியல்
maskedpeople.jpg

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும், போர்க் கப்பலில் இருந்து, ஹார்ட் டிஸ்க்குகள் உட்பட பல கணினி சம்பந்தப்பட்ட பொருட்கள் திருடு போய் உள்ளன. இதனைக் கண்டு அங்குள்ள விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து, போர் கப்பல்களை வாங்கி வந்த நம் நாடு, முதன்முறையாக உள்நாட்டுத் தயாரிப்பில், ஒரு போர்க் கப்பலை உருவாக்க திட்டம் தீட்டியது. அந்தக் கப்பலுக்கு விக்ராந்த் எனப் பெயர் வைத்தனர். அதனை கேரளாவில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், உருவாக்கி வருகின்றனர்.

கிட்டத்தட்ட பாதிக்கும் மேலான வேலை முடிந்துவிட்ட நிலையில், தற்பொழுது, உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதற்குத் தேவையான மென் பொருட்களை, ஒவ்வொன்றாக இன்ஸ்டால் செய்யும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். இதற்கிடையே, முக்கியமான ஹார்ட் டிஸ்க்குகள், கணினிப் பொருட்கள் மற்றும் பல சாஃப்ட்வேர்கள் காணாமல் போய் இருப்பதை வேலை செய்தவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்தக் கப்பலை 2021ம் ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்க்க, முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு வருடமே உள்ளது. இந்த ஒரு வருடத்திற்குள் இதனை உருவாக்கி சோதனையும் செய்ய வேண்டும்.

இவ்வளவு வேலைகள் இருக்கின்ற நிலையில், தற்பொழுது, இத்தகைய திருட்டு சம்பவத்தால், அங்கிருக்கும் ஊழியர்கள் முதல் பெரிய அதிகாரிகள் வரை, அனைவருமே அதிர்ச்சியில் உள்ளனர்.

HOT NEWS