வட்டிக்கு வட்டி விதிக்கும் திட்டம் குறித்து, உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு புதிய தகவலை அளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்குத் தொடரப்பட்டது. அதில், கடந்த ஆறு மாதமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்றக் கடன்களுக்கு வட்டி மற்றும் தவணைக் கட்ட வேண்டாம் என, ரிசர்வ் வங்கிக் கூறியது. இதனால், வட்டிக்கு வட்டி விதிக்கப்படலாம் என்று பலர் அச்சம் தெரிவித்தனர். இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வட்டிக்கு வட்டி விதிக்கப்படுவதற்கு, தடை விதிக்க முடியாது என தெரிவித்தார்.
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விதிக்கப்பட்டது. இது குறித்து, தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் மத்திய அரசிற்கு அறிவுரை கூறியது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு புதிய அறிக்கை ஒன்றினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில், 2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியிருப்பவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது எனவும், அதற்கு மேல் கடன் வாங்கியிருப்பவர்களுக்கே வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்றுக் கூறியுள்ளது. இதனால், சிறு குறு நிறுவனங்களும், வெகுஜன மக்களும் பயனடைவர் எனக் கூறியுள்ளது.