சாதாரணம மக்கள் இந்த ஆண்டு தீபாவளியினை சந்தோஷமாகக் கொண்டாடுவது, மத்திய அரசின் கையில் தான் உள்ளது என, உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, வங்கிகளில் கடன் வாங்கியிருப்பவர்கள், அடுத்த மாதங்களுக்கு கடன்களுக்கு வட்டிக் கட்டத் தேவையில்லை என, ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதனை அடுத்து, தொடர்ந்து 6 மாதங்களுக்கு வட்டிக் கட்ட விதிவிலக்கு வழங்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், தற்பொழுது ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல விதிவிலக்குகள் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். இந்த சூழ்நிலையில், வட்டிக்கு வட்டி விதிப்பதை, எங்களால் தடுக்க இயலாது என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வட்டிக்கு வட்டி விதிப்பது குறித்து, மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் கூறியது. அப்பொழுது 2 கோடி ரூபாய்க்கு குறைவாக கடன் வாங்கியிருப்பவர்களுக்கு, வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என, மத்திய அரசுக் கூறியுள்ளது. இருப்பினும், இது தற்பொழுது வரை அமல்படுத்தப்படவில்லை. இது குறித்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக, பேசிய வழக்கறிஞர், 2 கோடி ரூபாய்க்கு குறைவாக கடன் வாங்கியிருப்பவர்கள் அதிகமாக உள்ளதாக, இந்த நிபந்தனையினை விதிக்க ஒரு மாதம் ஆகும் என்றுக் கூறினார்.
நிபந்தனை வந்த பிறகு, அதனை அமல்படுத்துவதில் என்ன தாமதம் என, நீதிமன்றம் கூறியது. மேலும், இந்த ஆண்டு பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய தீபாவளியினை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது, மத்திய அரசின் கையில் தான் உள்ளது எனவும் தெரிவித்து உள்ளது.