சர்வதேச விசாரணைக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்! 116 நாடுகள் ஆதரவு!

20 May 2020 அரசியல்
whopuppet.jpg

கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச விசாரணைக்கு, உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கி உள்ளது.

சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால், உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த வைரஸானது, சீனாவின் ஊஹான் பகுதியில் அமைந்துள்ள ஆய்வுக் கூடத்தில் இருந்து, உலகம் முழுவதும் பரப்பப்பட்டு உள்ளது என, அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகின்றார்.

அவர் மட்டுமின்றி, ஜெர்மனி நாடோ தங்களுக்கு கொரோனா வைரஸிற்காக சீனா அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றுக் கூறியது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் என அனைத்துமே தற்பொழுது சீனாவிற்கு எதிராக நிற்கின்றன. இருப்பினும், சீனாவினை நம்பித் தான் உலக நாடுகளின் மருத்துவமே உள்ளதால், பெரிய அளவில் வேகமாகச் செயல்படாமல் உள்ளன.

தற்பொழுது உலக சுகாதார மையமும், சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி வரும் டிரம்ப், சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கூறினார். அவர் கூறியது போல், உலக சுகாதார அமைப்பில் அங்கம் வகிக்கும் 194 நாடுகளில், 116 நாடுகள் சர்வதேச விசாரணைக்கான தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.

தொடர்ந்து பல நாடுகள் தங்களுடைய தீர்மானத்தினை தெரிவித்து வந்தனர். இதனால், சீனாவிற்கு பெரிய அளவில் அழுத்தம் உருவானது. இதனைத் தொடர்ந்து, சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஒப்புக் கொண்டார். மேலும், கொரோனா வைரஸ் பிரச்சனை முடிவிற்கு வந்த பின்னர், விசாரணை செய்வதே சரி என்றுக் கூறியும் உள்ளார். இதனைத் தொடர்ந்து, வெளிப்படையான சுதந்திரமான ஆய்விற்கும், விசாரணைக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அனுமதி அளித்துள்ளார்.

HOT NEWS