700 கோடி ரூபாய்க்கு ஐபிஎல் சூதாட்டம்! பிரேத்யேக ஆப் மூலம் நடைபெற்றது அம்பலம்!

06 October 2020 அரசியல்
ipl.jpg

ஹைதராபாத் நகரில், பிரத்யேக ஆப்பினைப் பயன்படுத்தி, ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்று இருப்பது அம்பலமாகி உள்ளது.

தற்பொழுது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ள ஐபிஎல், போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இதனை ட்ரீம் 11 எனும் நிறுவனம் இந்த ஆண்டு, ஸ்பான்சாராக இருந்து நடத்தி வருகின்றது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் பொழுதும், பல பேர் சூதாட்ட வழக்கில் கைது செய்யப்படுவதும், அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாயினை கைப்பற்றுவதுமாக, போலீசார் இருந்து வருகின்றனர்.

அதே போல், இந்த ஆண்டும் அப்படியொரு சம்பவம் நடைபெற்று வருகின்றது. ஹைதராபாத் நகருக்கு அருகில் உள்ள பசீராபாத் பகுதியில், இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. ஐபிஎல் போட்டிகளினைப் பயன்படுத்தி, சூதாட்டமானது நடைபெற்று இருப்பது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கிரிக்கெட் லைன் மற்றும் கிரிக்கெட் எக்ஸ்சேஜ் என்ற ஆப்களைப் பயன்படுத்தி, இந்த சூதாட்டம் நடைபெற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, கூட்டத்தின் தலைவன் சந்தூர் சஷாங்க் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக எட்டு பேரை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து எட்டு செல்போன்கள், 23 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரி இளைஞர்கள், மாணவர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தற்பொழுது வரை, சுமார் 720 கோடிக்கும் அதிகமாக இவ்வாறு சூதாட்டம் நடைபெற்று இருப்பது அம்பலமாகி உள்ளது. அந்த ஆப்கள் மூலம் பயனர்களைத் தொடர்ந்து கொள்ளும் இந்த கும்பல், ஆசைவார்த்தை காட்டி சூதாட்டத்தில் ஈடுபடுத்துகின்றது. பின்னர், அதனைப் பயன்படுத்தி சம்பாதித்தும் இருப்பது அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

HOT NEWS