இந்த ஐபிஎல் இந்தியாவில் கிடையாதா? பிசிசிஐ புதிய முடிவு!

04 July 2020 விளையாட்டு
ipl.jpg

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியினை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் நடத்த யோசித்து வருவதாக, பிசிசிஐ கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், இந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் இன்னும் நடத்தப்படாமல் உள்ளன. அவைகளை எப்பொழுது நடத்தலாம் என, ஐபிஎல் நிர்வாகமும், பிசிசிஐயும் கலந்து ஆலோசனை நடத்தின. தற்பொழுது வரை கொரோனா வைரஸானது, இந்தியாவில் கட்டுக்குள் வரவில்லை.

அதுமட்டுமின்றி, இந்த வைரஸ் பரவல் எப்பொழுது முழுமையாகத் தீரும் என்றும் யாருக்கும் தெரியாது. அதே சமயம், இந்த ஆண்டுக்கானப் போட்டியினை எங்கு நடத்துவது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்துப் பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியானது அநேகமாக இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த இரண்டு நாடுகளில் எதில் நடத்தலாம் என, அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஐபிஎல் ரசிகர்கள், இந்த முடிவினை நினைத்து வருத்தம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இந்தப் போட்டியினை நடத்த வேண்டும் எனவும், அதுவரை இந்தப் போட்டியினைத் தள்ளிப் போட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

HOT NEWS