அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையில் சண்டை ஸ்டார்ட்! ஆரம்பித்த அண்ணாமலை!

21 December 2020 அரசியல்
annamalai.jpg

அதிமுக அரசு வழங்கும் பொங்கல் பரிசுக் குறித்து, தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை, கடுமையான விமர்சனத்தினை முன் வைத்துள்ளார்.

அதிமுக தன்னுடைய முதல்வர் வேட்பாளாரக, எடப்பாடி பழனிசாமியினை முன்மொழிந்துள்ளது. ஆனால், அதன் கூட்டணியில் உள்ள பாஜகவோ தாங்கள் தான் முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்றுக் கூறி வருகின்றது. அதற்கு அதிமுக அமைச்சர்களும் தங்களுடைய பதில்களை சராமாரியாகத் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலை தற்பொழுது கடுமையாக முதல்வரையும், அதிமுக அரசையும் விமர்சனம் செய்துள்ளார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற கூட்டதில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், 2500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் வாக்களித்தால், கட்டாயம் கார் டயரில் விழுந்து கும்பிடுபவர்களின் ஆட்சி தான் அமையும் எனவும், ஏற்கனவே செய்த ஊழல் பணத்தில் இருந்து தான் இந்தப் பணத்தினை வழங்க உள்ளனர் எனவும் கடுமையாக விமர்சித்து உள்ளார். அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ள நிலையில், அவருடன் கூட்டணி வைப்பதற்காக தற்பொழுது அதிமுகவினை பாஜகவினர் மறைமுகமாகவும், நேரடியாகவும் சீண்டுகின்றனர் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS