ஈரான் தான் பயமுறுத்தும் மெயில்களை பரப்புகின்றது! அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு!

22 October 2020 அரசியல்
uselection2020.jpg

ஈரான் தான் அமெரிக்க மக்களுக்கு, அச்சுறுத்தும் விதமாக, தேவையற்ற மெயில்களை அனுப்பி வருவதாக, அமெரிக்கா பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகின்றது.

அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு அமைப்பினைச் சேர்ந்த ஜான் ராட்கிளிப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில், தற்பொழுது அமெரிக்க மக்களுக்கு அவநம்பிக்கையினை ஏற்படுத்தும் விதமாகவும், தேர்தலை குலைக்கும் வகையிலும், பல மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன. இவைகள் பெரும்பாலும், டிரம்பிற்கு ஆதரவளிக்கும் குழுவினரால் வர வாய்ப்பிருக்கலாம் என எண்ணுகின்றோம்.

இந்த மெயில்களை ஸ்பேம் மெயில்கள் என அழைக்கின்றோம். இவைகள் பெரும்பாலும், ஈரான் மற்றும் ரஷ்யாவில் இருந்து வெளியாகி வருகின்றன எனத் தெரிவித்து உள்ளார். இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு உள்ளன. இந்த சூழ்நிலையில், இது போன்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS