டிரம்ப்பிற்கு அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்த ஈரான்! டிரம்பிற்கு புதிய தலைவலி!

01 July 2020 அரசியல்
qassemsoleimanifuneral.jpg

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு, ஈரான் அரசாங்கம் அதிரடியாக அரஸ்ட் வாரண்டினைப் பிறப்பித்து உள்ளது.

கடந்த ஜனவரி 3ம் தேதி அன்று, ஈரான் நாட்டின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான குவாசிம் சுலைமானியினை, அமெரிக்கப் படையினர், ஈராக்கில் இருந்து கொண்டு, ட்ரோன் மூலம் சுட்டுத் தள்ளினர். இதில், குவாசிம் சுலைமானி உயிரிழந்தார். இதற்காக, அமெரிக்காவினைப் பழிவாங்குவதற்கு பல்வேறு செயல்களை, ஈரான் அரசாங்கம் செய்து வருகின்றது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது, குண்டு வீசுவது, அமெரிக்கத் துருப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த நாட்டில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, டிரம்ப் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் ட்ரம்ப் ஆஜராகவில்லை.

இதனையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினைக் கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அந்நாட்டின் அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் டொனால்ட் ட்ரம்பினை கைது செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து சர்வதேசப் போலீசான இண்டர்போலுக்கு, தகவல் வழங்கப்பட்டு உள்ளது.

ஒருவேளை ரெட் கார்ட் நோட்டீஸானது, உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டால் டொனால்ட் ட்ரம்பால் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்ய இயலாது. மேலும், அடுத்த செப்டம்பரில் தேர்தல் வர உள்ளதால், இதனை பயன்படுத்தி ஈரான் அரசாங்கம், டொனால்ட் ட்ரம்பினை பழிவாங்க முயற்சி வருகின்றது.

HOT NEWS