அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல்! போர் மூலம் அபாயம்! அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!

08 January 2020 அரசியல்
iranattack.jpg

ஈரான் தலைவர் சுலைமானியினை, அமெரிக்க இராணுவம் டிரோன் உதவியுடன் சுட்டுக் கொன்றது. இதனால், ஈரானில் பெரிய அளவில் அமெரிக்காவிற்கு எதிராக, எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால், அமெரிக்காவிற்கும், ஈரானிற்கும் இடையில் போர் மூலம் அபாயம் நிலவி வருகின்றது.

இந்நிலையில் ஈரானைச் சுற்றிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில், அமெரிக்க இராணுவத்தின் நிலைகள் உள்ளன. அவைகளை உடனடியாக ஈரானிலிருந்து வெளியேற்ற வேண்டும் என, ஈரான் எச்சரித்தது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், ஈரான் கூறுவது போல வெளியேற வேண்டும் என்றால், அங்கு நாங்கள் கட்டியுள்ள விமான நிலையங்களுக்கு பல ஆயிரம் கோடி டாலர்களை அமெரிக்காவிற்கு ஈரான் வழங்க வேண்டும் என கூறினார். மேலும், அமெரிக்கா மீதோ அல்லது அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானில் உள்ள 52 முக்கியமான இடங்களில், அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தும் எனக் கூறினார்.

இதனையடுத்து, சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி தரும் விதத்தில், நேற்று அமெரிக்க இராணுவத்தின் நிலைகள் மீது, கண்மூடித் தனமானத் தாக்குதலை ஈரான் இராணுவம் நடத்தியது. அதில், சுமார் 12 ஏவுகணைகளை தாக்குதலுக்காக ஈரான் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அமெரிக்காவின் இரண்டு இராணுவ நிலைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றது என, அமெரிக்காவும் உறுதிபடுத்தி உள்ளது.

இதற்குப் பதிலடி தரப்படும் எனவும், அனைத்தும் நலமாக உள்ளது எனவும், எங்களிடம் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருப்பதாகவும், டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அங்கு ஏற்பட்டுள்ள சேதத்தினை கணக்கிட்டு வருவதாகவும், விரைவில் இது பற்றிய அறிக்கை வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, தாக்குதல் குறித்துப் பேசியுள்ள ஈரான் அதிபர், எங்களை 52 இடங்களில் தாக்கிவிடுவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அவர்கள் 290 என்ற எண்ணினை நினைவில் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடான, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் நடைபெற்று வரும் மோதலால், உலக அளவில் கச்சா எண்ணெயின் விலையானது 5% உயர்ந்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில், போர் மூலம் அபாயம் ஏற்பட்டுள்ளதை தவிர்க்க, மற்ற நாடுகள் முயற்சித்து வருகின்றன.

தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, ஈரான் நடத்தியத் தாக்குதலில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுலைமானியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில், இந்த தாக்குதலை ஈரான் அரசு நிகழ்த்தி உள்ளது.

HOT NEWS