ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல்! யாரும் பொறுப்பேற்கவில்லை!

18 February 2020 அரசியல்
iranattack.jpg

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது, கண்மூடித்தனமாக தாக்குதல் நடைபெற்றுள்ள தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

ஈரான் நாட்டின் மிகப் பெரும் தலைவர்களுள் ஒருவரான, குவாசிம் சுலைமானியினை அமெரிக்க இராணுவம் டிரோன் தாக்குதல் மூலம் கொன்றது. இதனையடுத்து, ஈரான் நாட்டிற்கும், அமெரிக்க நாட்டிற்கும் இடையில் போர் மூளும் அபாயம் உருவானது.

இதினிடையே, ஈராக் நாட்டின், பாதுகாக்ப்பட்ட பசுமை வளப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது, கடந்த மாதம், இரண்டு முறை ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் இராணுவம் நடத்தியது. இதில் பல வீரர்கள் உயிரிழந்தனர் என, ஈரான் தரப்பு செய்தி நிறுவனங்கள் தெரிவித்தனர். இது குறித்துப் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தத் தாக்குதலில் எவ்விதப் பாதிப்பும் பெரிய அளவில் ஏற்படவில்லை எனவும், ஒரு சில வீரர்கள் காயமடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தற்பொழுதும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது, ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள செய்தி வெளியாகி உள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது.

HOT NEWS