அமெரிக்க தூதரகத்தின் மீது மீண்டும் தாக்குதல்! ஈரான் அமெரிக்கா பதற்றம் அதிகரிப்பு!

21 January 2020 அரசியல்
iranattack.jpg

ஈரானின் படைத் தலைவர் குவாஷிம் சுலைமானியைக் கொன்றதில் இருந்து, அமெரிக்கவான் படைகள் மீது ஈரான் இராணுவம் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ஈரான் நாட்டின் இரண்டாவது பெரிய தலைவரும், படைத் தளபதியுமான குவாசிம் சுலைமானியினை அமெரிக்க இராணுவம், ஈராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகில் வைத்து, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. அதில், சுலைமானி உட்பட 9 பேர் மரணமடைந்தனர்.

இதனையடுத்து, சுலைமானியின் மரணத்திற்கு பழி வாங்கும் விதத்தில் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது, ஈரான் இராணுவம் மற்றும் ஈரான் இராணுவத்திற்கு உதவி செய்யும் குழுக்கள் ஆகியவை, தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஈராக்கில் உள்ள, அமெரிக்கத் தூதரகம் பாதுகாக்கப்பட்ட பசுமைப் பகுதியில் அமைந்துள்ளது. சமீபத்தில் அப்பகுதியில், ஈரான் இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், தற்பொழுது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால், என்ன இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது பற்றியத் தகவல்கள் வெளியாகவில்லை. இந்த தொடர் தாக்குதல்களால், பசுமைப் பகுதியில் வாழும் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

HOT NEWS