இரவு தாக்குதல்! மூன்றாம் உலகப் போரினை தடுக்க உலக நாடுகள் முயற்சி!

14 January 2020 அரசியல்
iraqattack.jpg

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் தற்பொழுது பதற்றம் நிலவி வருகின்ற நிலையில், நேற்று ஈராக்கில் உள்ள, அமெரிக்க விமானப் படை தளங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டின் படைத் தலைவர் குவாஷிம் சுலைமானியினை, அமெரிக்காவின் இராணுவம், ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றது. இதில், சுலைமானி உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஈரானைச் சுற்றியுள்ள அமெரிக்காவின் படைகள் மீது, ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், 80 அமெரிக்க வீரர்கள் இறந்ததாக ஈரான் செய்தி ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர. இருப்பினும், அமெரிக்க வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், ஈரானின் அருகில் அமைந்துள்ள ஈராக் நாட்டில், அமெரிக்காவின் படைகள் உள்ளன. அந்த நாட்டின் பிஸ்மாயக், அல்-ஆசாத், எர்பில் ஆகிய இடங்களில், அமெரிக்காவின் விமானப் படை வீரர்களும், அமெரிக்காவின் போர் விமானங்களும் உள்ளன. இங்கு ஏற்கனவே தாக்குதல் நடத்திய நிலையில், ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்திற்கு அருகே உள்ள பலாட் என்ற இடத்தில், அமெரிக்காவிற்கு சொந்தமான விமானப் படைகள் அங்கு உள்ளன.

அவர்கள் மீது, கட்யுஷா என்ற ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. சுமார், எட்டு ஏவுகணைகள் அந்த விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. ஆனால், அதிர்ஷ்டவசமாக ஏற்கனவே அங்கிருந்த அமெரிக்க விமானப்படை வேறொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து விட்டதாகவும், அங்கு இரு மிக்-16 ரன விமானமும், ஓரிரு வீரர்களுமே இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில், ஒரு சில வீரர்கள், இந்த ஏவுகணைத் தாக்குதலால் காயம் அடைந்துள்ளனர் என, ஈராக் நாட்டிலுள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

இதுவரை இந்தத் தாக்குதலுக்கு, யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதலை அடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே, போர் மூலாமல் இருக்க, உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

HOT NEWS