டிரம்ப் தலைக்கு பரிசுத் தொகை! வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படும்! ஈரான் எச்சரிக்கை!

07 January 2020 அரசியல்
qassemsoleimanishrine.jpg

ஈரான் நாட்டின் முக்கியத் தலைவரும், இரகசியப் படைப்பிரிவின் தலைவருமான குவாசிம் சுலைமானி மற்றும் அவருடைய முக்கிய வீரர்களை அமெரிக்க விமானப் படையானது, டிரோன் மூலம் தாக்கியது. பாக்தாத் விமானத்தளத்திற்கு அருகில் நடைபெற்ற இத்தாக்குதலில், சுலைமானி படுகொலை செய்யப்பட்டார்.

அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்கர்களைத் தாக்கியதற்காக, இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா விளக்கம் அளித்தது. இந்தத் தாக்குதல் சட்ட விரோதமானது என, ஈரான் குற்றம் சாட்டியது. இதற்குத் தக்கப் பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. இதனால், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில், போர் மூலும் அபாயம் ஏற்பட்டது.

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவீட் செய்தும் வந்தார். ஈரானின் புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமான 52 இடங்களின் மீது, அமெரிக்கா குறி வைத்துள்ளதாகவும், அமெரிக்கர்கள் மீதோ அல்லது அமெரிக்காவின் நிலைகள் மீதோ தாக்குதல் நடத்தினால், கண்டிப்பாக அந்த 52 இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில், ஈரான் நாட்டின் முக்கிய தலைவர் ஒருவர் பேசுகையில், அமெரிக்க அதிபர் தலையைக் கொண்டு வருபவருக்கு 574 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கான பணத்தினை மக்கள் முன் வந்த தர வேண்டும் எனவும் கூறியிருந்தார். மேலும், அந்நாட்டு அதிபர் கூறுகையில், எங்களால் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் மீது தாக்குதல் நடத்த இயலும் எனவும், சரியானத் தருணத்திற்காக காத்திருக்கிறோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HOT NEWS